இப்போதைய காலகட்டத்தில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
கொரோனா பாதிப்புக்கு பின் நாம் முதலில் திறக்க வேண்டியது பள்ளி கல்லூரிகளை தான். மற்றவர்களை காட்டிலும் மாணவர்கள் தான் தற்போது மிகுந்த பாதிப்பில் உள்ளனர். அவர்களுக்குத் தான் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டை தூக்கிப் பிடிப்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
எனவே இப்போதைய சூழ்நிலைக்கு கல்வி தான் முக்கியம் என்பதை உலக நாடுகள் புரிந்து வைத்துள்ளது. அதையேதான் இந்தியாவும் பின் தொடர வேண்டும். கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் அனைத்தும் பிற்காலத்தில் தானாக நடைபெறும். அதனை பிறகு பார்த்து கொள்ளலாம். இப்போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.