காவலரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த டாக்டர் மற்றும் நர்சுகளை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து அங்கிருந்த டாக்டர் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் ரமேஸ் மற்றும் கிங்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறு செய்து கொண்டிருந்த துரையை வெளியே செல்லும்படி வலியுறுத்தினர்.
ஆனால் காவலர் ரமேசை துரை அவதூறாக பேசி கழுத்தை நெரித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 2 காவல்துறையினரும் துரையை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அரசு டாக்டர் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்துள்ளனர்.