Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி விழா – மணியடித்து, மண்டியிட்டு, பூஜை செய்த யானைகள்…!!!

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் நடந்த விநாயக சதுர்த்தி விழாவின் யானைகள் மணியடித்து மண்டியிட்டு பூஜை செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உதகை  தெப்பக்காடு யானைகள்  முகாமில் 25 கும்கி யானைகள் இரண்டு குட்டி யானைகள் உள்ளது விநாயகர் சதுர்த்தி விழா நாளான இன்று அனைத்து யானைகளையும் மாயாற்றில் குளிக்க வைத்து அலங்கரித்த பாகங்கள் முகாமுக்கு அழைத்து வந்து வரிசையில் அணிவகுத்து நிறுத்தினர். கிருஷ்ணா, மசினி என்ற இரு கும்கி யானைகள் விநாயகர் கோவிலில் மணி அடித்தும் மண்டியிட்டும் பூஜை செய்தன.

 அவை தும்பிக்கையை தூக்கி வணங்கியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவை தீபாதாரணை காட்டும்போது யானைகளும் பிழிரிய  காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பின்னர் பொங்கல், கரும்பு, பழங்கள், தேங்காய், வெல்லம், உப்பு, மஞ்சள் உள்ளிட்டவை  யானைகளுக்கு வழங்கப்பட்டது. விநாயகரை குழந்தைகள் உள்ளிட்டோர் உற்சாகமாக ரசித்தனர்.

Categories

Tech |