Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. தொடர்ந்து நீடிக்கும் தடை…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்…!!

காட்டு யானைகள் தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமுடி, முக்கோட்டுமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் தோட்ட பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வபோது காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். எனவே வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Categories

Tech |