காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 10 லட்சம் பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உலக அளவிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று ஸ்டேட் ஆஃ ப் குளோபல்ஏர் அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 9,79,700 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவை விட சீனாவில் மட்டும் 14,24,000 பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 10 லட்சம் பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.