Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய போஸ்டர்…ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிகைகள் நயன்தாரா , சமந்தா ஆகியோர் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த வருடம் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது ‌‌. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது . அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார் .

இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது . அதில் டீ சர்ட் அணிந்த விஜய் சேதுபதி மிக இளமையாகவும் ,ஸ்டைலாகவும் உள்ளார். தற்போது இணையத்தில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி , நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் ஹிட் ஆனதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது .

Categories

Tech |