Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் தெரிய வேண்டும்…. விழிப்புணர்வு ஊர்வலம்…. மாணவர்கள் பங்கேற்பு….!!

காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்டோ ஏஞ்சலின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்டோ ஏஞ்சலின் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு வட்டார காசநோய் சிகிச்சையாளர் சாரதா முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து ஊர்வலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு காசநோய் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் ஊர்வலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி கடைவீதி மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக சென்று பின் பேருந்து நிறுத்தம் அருகாமையில் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோயின் அறிகுறிகள் அதிலிருந்து மீண்டுவர எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் அதற்கு அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |