காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கொண்டேகவுண்டன்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மேடு அருகில் காருடன் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து காரை சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ராம்குமார், நசுருதீன், அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 96 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.