Categories
சினிமா தமிழ் சினிமா

‘காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்’…ஆரியின் ரசிகர்கள் வேற லெவல்…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் ரசிகர்கள் காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும், சமூக சேவைகளையும் செய்து வந்தார் . பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் மற்றும் அதன் மூலம் கிடைத்துள்ள புகழை கொண்டு ஆரி இன்னும் பல சமூக சேவைகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . வெற்றியைக் கூட ஆட்டம்,  பாட்டம் என கொண்டாடாமல் அமைதியான முறையில் பலருக்கும் பயன்படும் விதமாக ஆரி கொண்டாடி வருகிறார் .

இந்நிலையில் ஆரியின் ரசிகர்கள் காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி யுள்ளனர் . காப்பகத்தில் உள்ள ஒட்டுமொத்த குழந்தைகளும் ஒரே குரலாக ‘வாழ்த்துக்கள் ஆரி அண்ணா. உங்கள் நேர்மை தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். உங்களைப் போலவே நேர்மையானவர்களாக நாங்களும் வளர்வோம்’ என்று கூறும் வீடியோ வெளியாகியுள்ளது . இதுதான் ஆரியின் உண்மையான வெற்றி என்று ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர் .

Categories

Tech |