Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எப்படியும் மாட்டி தான் ஆகணும்… நடைபெறும் தொடர் சம்பவங்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசு திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஓடக்கரை உச்சிப்பள்ளி மாயவர் கோயிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்கு சொந்தமான உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டனர். இதனை அடுத்து கோயிலுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி கொலுசை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த சம்பவம் குறித்து பழவூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் மற்றும் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |