அடுக்குமாடி கட்டிடக் குடியிருப்பு இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் மாயமான 80 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை உள்ளது. இந்த மியாமி பகுதியின் அருகில் 12 தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பானது கடந்த 25ஆம் தேதி திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 80 பேர்கள் மாயமாகி உள்ளனர். இதனை அறிந்த தீயணைப்பு குழு அவர்களை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனை அடுத்து புதையுண்ட அனைவரும் இறந்திருக்க கூடும் என தீயணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தீயணைப்பு குழுவின் தலைவர் ரெய்டே ஜெடல்லா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காணாமல் போனவர்கள் இறந்திருக்கக் கூடும் எனவே அவர்களை தேடும் பணியை விட்டுவிட்டு புதையுண்டவர்களை மீட்கும் பணி நடைபெறும். மேலும் இது காணாமல் போனவார்களின் உறனவிர்களை பரிதவிப்பில் இருந்து ஆறுதல்ப்படுத்தும் என்று கூறியுள்ளார்.