Categories
உலக செய்திகள்

இங்கயும் நல்லவங்க இருக்காங்க…. கதறி அழுத சிறுமி…. பிரபல நாடுகளில் நடைபெறும் போட்டி….!!

யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி தோல்வியடைந்ததை கண்டு அந்நாட்டின் சிறுமி ஒருவர் கதறி அழுததை இங்கிலாந்து பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்துள்ளார்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் இங்கிலாந்து-ஜெர்மனி நாடுகள் இந்த யூரோ கால்பந்து போட்டியில் மோதியுள்ளது. அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து கால்பந்து போட்டியை மைதானத்தில் வந்து காணவந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் தன்னுடைய நாடு தோல்வியடைந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்ததை கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் பலரும் சிறுமியை இணையதளத்தில் கேலி செய்துள்ளார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Joel என்பவர் சிறுமிக்கு ஆதரவாக சமூகவலைத்தள பக்கத்தில் Just Giving page for the youngester என்னும் பக்கத்தை உருவாக்கி கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோல்வியை கண்டு கதறி அழுத சிறுமிக்காக நிதியைத் திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி இவர் ஆரம்பித்த இந்தப் பக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பவுண்டுகள் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, இங்கிலாந்த் நாட்டில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |