Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : 12.30க்கு பாஜகவில் இணைகிறார் ஜோதிராதித்ய சிந்தியா …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 12.30 மணிக்கு பாஜகவில் இணைகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருந்தால், அதன்பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர் பாரதிய ஜனதா கட்சி எப்போது சேர்வார் ? இதற்கான நிகழ்வை பாரதிய ஜனதா கட்சி எங்கு நடத்தும், டெல்லியில் நடத்துமா ? அல்ல மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடத்துமா ? எப்போது நடக்கும் என்று பல்வேறு விதமான கேள்விகள் எழுந்தன.

நேற்று மாலையில் கூட அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட நிலையில் நேற்று மாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் குழு மாநிலங்களவைத் தேர்தல் சம்பந்தமான விவாதத்தை நடத்தியதே தவிர ஜோதிராதித்தய சிந்தியா பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இன்று 12.30 மணிக்கு  ஒரு முக்கிய நபர் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் சொல்லப்படுகின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜெ.பி. நட்டா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த பிறகு அவருக்கு மாநிலங்களவைத் தேர்தலில் இடம் கிடைக்குமா ? அப்படி அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநிலங்களவைக்கு  அனுப்பட்டால், நரேந்திர மோடி அமைச்சரவையில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.இதற்கான விடைகளெல்லாம் ஜோதிராதித்ய சிந்தியா பாஜக கட்சியில் இணைந்த பிறகுதான் கிடைக்கும்.

Categories

Tech |