புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சற்று முன் காலமானார். 60 வயதான இவர் அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மருத்துவ உதவி கோரிய நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் பொருளாதார உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள ரசிகர்களையும், நடிகர்களையும் தவசியின் இறப்பு என்ற அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Categories
JustNow: மிக பிரபல தமிழ் நடிகர் மதுரையில் காலமானார் – அதிர்ச்சி செய்தி …!!
