5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெய்பீம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஜெய்பீம் பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது ‘வன்னிய சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோரவேண்டும். மேலும் தங்களுக்கு 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும்’ எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.