Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: 10, 12ம் வகுப்புகள் நேரடி தேர்வு வேண்டாம்…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்துடன் மாணவர்களை நேரில் தேர்வை எதிர்கொள்ள வைப்பது நியாயமற்றது & மனிதாபிமானமற்றது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே CBSE, ICSE தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |