திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
நகர மன்ற துணைத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.