வடிவேலுக்கு ஒமிக்ரான் இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது: ” கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி, எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணுமாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நடிகர் வடிவேலுக்கும், இயக்குனர் சுராஜூக்கும் ஒமைக்ரான் தொற்றாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.