Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: லதா மங்கேஷ்கர் மறைவு…. மாநிலங்களவையில் மவுன அஞ்சலி….!!!!

லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு ஞாயிறுக்கிழமை (பிப்…6), திங்கள்கிழமை (பிப்…7) ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வந்தது. அந்த வகையில் அந்நாளில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு மாநிலங்களவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் அடிப்படையில் மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |