Categories
மாநில செய்திகள்

JUSTIN : மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு….. ஜெனரல் அருண் கூறிய முக்கிய அறிவிப்பு….!!!

அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர் செவிலியர் மூலம் இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டிசம்பர் 10ஆம் தேதி ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த லெப்டினன்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் நஞ்சப்ப சத்திரம் மக்களின் உதவிக்குக் கைமாறாக ஓராண்டு முழுவதும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர், செவிலியர் மூலம் இந்த ஊர் மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |