Categories
மாநில செய்திகள்

JUSTIN : மாற்றுத்திறனாளிகள் எண்ணம் நனவாகியுள்ளது…. முதல்வர் ஸ்டாலின் ட்வீட்….!!!!

மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைக்கு செல்லும் வகையில் பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிக நடைபாதை அமைப்பதை சென்னை மாநகராட்சி வழக்கமாக வைத்துள்ளது. தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால் கடற்கரை சாலையில் தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டு மூன்று சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை செல்வதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக தற்காலிக நடைபாதையை அமைச்சர்கள் சேகர்பாபு, கே என் நேரு, மா சுப்பிரமணியன் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக சென்று கடலின் அழகை கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “கடல் அலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தியுள்ள தற்காலிக பாதையை விரைவில் நிரந்தரமாக்குவோம், சிறிய பணிதான் இது. பெரிய மாற்றத்திற்கு தொடக்கமும் கூட” என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |