காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் பிடிசி குடியிருப்பில் மழை பாதித்த இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலரின் வீடுகளில் மழைநீர் புகுந்து நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் பிடிசி குடியிருப்பில் மழை பாதித்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.