Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “மகளிர் ஆற்றல் விருது”…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..!!!!!

சர்வதேச மகளிர் தினம் நேற்று மார்ச்.8 கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 2020 மற்றும் 2021-ஆம் வருடத்துக்கான “மகளிர் சக்தி விருது”களை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். கடந்த 2020, 2021-ஆம் ஆண்டில் சிறந்த சாதனைகளை புரிந்த 29 பெண்களுக்கு (வருடத்துக்கு 14 விருதுகள் வீதம்) 28 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் ஜெயாமுத்து மற்றும் தேஜம்மாள் இருவரும் 2020-ம் வருடத்தின் ஒரு விருதுக்கு தகுதி பெற்று இருந்தனர். சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் தாரா ரங்கசாமி 2021ஆம் வருடத்துக்கான விருதுக்கு தகுதி பெற்று இருந்தார்.
கடந்த 2020-ம் வருடத்துக்கான விருதுகள் கொரோனா தொற்று காரணமாக வழங்கப்படாமல் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், 2020 ஆம் வருடத்துக்கான “மகளிர் ஆற்றல்” விருதினைப் பெற்றுள்ள நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து மற்றும் கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா, 2021-ஆம் வருடத்துக்கான விருதினைப் பெற்ற மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி போன்றோருக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |