மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலை பார்த்து அவரது மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் அவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை நீதிபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் சூலூரில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் விமானப்படைக்கு சொந்தமான c-130j சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது டெல்லி பாலம் விமான தளத்தில் அவர்களின் உடல்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கதறும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது. பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி அவர்களின் மகள்களுக்கு ஆறுதல் கூறினார் .