தாய் மற்றும் தந்தையின் உடலுக்கு அவர்களின் மகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தற்போது டெல்லி பாலம் விமான தளத்தில் அவர்களின் உடல்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு அவர்களது மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.