திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் குத்தகை ஏலம் விடுவதில் ஏற்பட்ட தகராறில் சுட்டுக்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.