தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமர்ந்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த உத்தரவும் கிடையாது என்று குறிப்பிட்டது. தமிழ் மீது கொண்ட அதீத பற்று மற்றும் மரியாதையின் காரணமாகவே எழுந்து நிற்கின்றோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.