தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை போக்குவரத்து காவல்துறை ஆணையராக ஆறுமுகசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.