Categories
மாநில செய்திகள்

JUSTIN : தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்ட பேனர்…. பிரதமரின் படம் இல்லை…. பாஜகவினர் பரபரப்பு….!!!

தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்பதற்காக அதனை அகற்ற பாஜகவினர் முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சாலை கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது.

இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமரின் புகைப்படம் இல்லை எனக்கூறி பேனரை அகற்ற முயற்சி செய்தனர் பாஜகவினர்.  இதை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் பெயரில் பாஜகவை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |