ஜெய் பீம் படம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் உள்ள சில காட்சிகள் தனிப்பட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று பல கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா ஜோதிகா உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 4ஆம் தேதி ஒத்திவைப்பதாக சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் தெரிவித்துள்ளார்.