ஜெய்பீம் குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ஜெய்பீம் திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. “படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள், சம்பவங்கள், அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம்.
எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள். அதில் ஜாதி, மத, மொழி, இன, பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.