Categories
மாநில செய்திகள்

JUSTIN : சிறுவன் மரணம்…. சிசிடிவி வெளியீடு…. பெரும் பரபரப்பு….!!!

விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நினைத்து அவனை எழுப்ப முயற்சித்த போது தான் அவன் இறந்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது அந்தச் சிறுவன் உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இறந்த இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த குழந்தை யாருடையது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய தினம் இரவில் மர்ம நபர்கள் இருவர் குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் இந்த குழந்தையை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |