Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: சிம்புவின் மாநாடு ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு… வருத்தத்துடன் தெரிவித்த தயாரிப்பாளர்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |