கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது.
கோட்டைமேடு, ரத்தினபுரி, உக்கடம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.