குரூப்-4 தேர்வு முறைகேடு என்பது வெட்கக்கேடான நிகழ்வு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்துள்ளது. அதன்படி,
1) முறைகேடு பிரச்சினையால் தேர்தல் ரத்தாகும் போது தேர்வு மட்டும் ரத்து செய்யாதது ஏன்?
2)ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் எடுத்துச் செல்லும்போது வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு தராதது ஏன்?
3) முறைகேடு செய்த தமிழகத்தின் வெவ்வேறு பகுதியினர் சரியாக 2 தேர்வு மையங்களை தேர்வு செய்தது எப்படி?
4) குரூப்-4 தேர்வு முறைகேடு மிகப் பெரும் மோசடி, விசாரணை வேரில் இருந்து தொடங்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டுவரும் வகையில் உரிய நடவடிக்கை தேவை.
5)சரியான பொறுப்புகளில் சரியான நேர்மையான நபர்களை நியமிக்கும் போது தவறுகள் தவிர்க்கப்படும்.
6) 2016 குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பு தற்போது ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.