காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை என்று இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி, எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு மட்டும் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாவது: காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கின்றது என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநாடு பட வெற்றி விழாவில் சிம்பு பங்கேற்காதது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.