Categories
மாநில செய்திகள்

JUSTIN: கரூர் பள்ளி மாணவி தற்கொலை… காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை…!!!

கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ‘பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் தான் இருக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த மாணவி தற்கொலைக்கு முன்னதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்பு பட்டியலில் சேர்த்து கரூர் எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |