வடசென்னை அனல்மின் நிலையத்தில் கனமழை காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் பெய்த கனமழை காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி 12 மணி நேரத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மட்டும் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்பட்ட இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Categories
JUSTIN: கனமழை எதிரொலி… 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு… அமைச்சர் செந்தில்பாலாஜி…!!!
