தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் . அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தக்கூடிய பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் அரசு சிறப்பாக செய்து வருகின்றது. எல்லா மாவட்டத்துக்குமே மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக செல்கிறார். கோயமுத்தூர், திருச்சியில் ஆய்வு செய்தார். இன்று மதுரையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவர்கள், மாவட்ட நிர்வாகம், மருத்துவக் கல்லூரி டீன், சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாநகராட்சி ஆணையர் நான் உட்பட பங்கேற்ற விரிவான ஆய்வு நடந்தது.
மதுரை மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களையும் முதலமைச்சர் நேரடியாக கண்காணித்து கொண்டு இருக்கிறார். மதுரையில் இந்த வாரத்தில் பாசிட்டிவ் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கிறது. அதிகப்படியான பரிசோதனை, விரைவாக நோயை கண்டறிதல், சீக்கிரமாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தல், முறையான மருத்துவ சிகிச்சை வழங்குதல் இது தான் தமிழ்நாட்டின் கொரோனாவை கையாளும் உத்தி. இது தான் ரொம்ப முக்கியமானது. நாமும் தொடர்ந்து இதை தான் செய்துகொண்டு இருக்கின்றோம். மத்திய அரசும், மத்திய அமைச்சராகமும், உலக சுகாதார நிறுவனங்கள், ICMR போன்ற வல்லுநர் குழு நம்மை பாராட்டுகிறார்கள்.
இந்தியாவிலேயே 10 லட்சத்துக்கு மேல நம்ம டெஸ்ட் பண்ணி இருக்கோம். 10 லட்சத்துக்கு மேல டெஸ்ட் பண்ண ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவில் பிற மாநிலங்களை விட கடுமையாக 10 லட்சத்து 77 ஆயிரத்து 484 டெஸ்ட் பண்ணி இருக்கலாம். நம்மைவிட அதிகமாக கொரோனா பாசிட்டிவ் இருக்கக்கூடிய மகராஷ்டிரா 8 லட்சம், டெல்லி 4 லட்சத்து 59 ஆயிரம் தான் இருக்காங்க.
இது மதுரைக்கும் பொருந்தும். கொரோனா ஆரம்ப நிலையிலுள்ள போது மதுரையில் 400, 500, 800 ஆக அதிகப்படுத்தி இருக்கிறோம். இன்னைக்கு 1400, 1500 என்று அதிகப்படுத்தியுள்ளோம். இன்று ஒரே நாள்ல கூட அளவுக்கதிகமான டெஸ்ட் எடுத்து இருக்கிறோம். 34 ஆயிரத்து 805 டெஸ்ட் நாட்டிலே அதிகமான டெஸ்ட். டெஸ்ட் அதிகம் என்பது சாதாரணமல்ல…
இது ஆர்டி பிஸி ஆர் டெஸ்ட். நம்ம உடம்புல வைரஸ் வந்துச்சுனா அதன் RNAவை பிரித்தெடுத்து பயோ செப்டி ரூமில் ஆறு மணி நேரம் ஒவ்வொரு டெஸ்ட் சாம்பலாக எடுப்பது மிகப்பெரிய ஒரு அசாத்தியமான நிகழ்வை நாம தொடர்ந்து செஞ்சிட்டு வருகின்றோம். அரசினுடைய நோக்கம் பாதிப்படைந்தவர்களை சரியான சிகிச்சை செய்து வருகின்றோம். Remdisivir, Tocilizumab போன்ற விலை உயர்ந்த வீரியமிக்க மருந்துகள் மதுரைக்கு வர வைக்கப்பட்டுள்ளன. மதுரை டீன் தலைமையில், இங்கு இருக்கக்கூடிய சுகாதார அலுவலர்கள் மருத்துவர்கள் , செவிலியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணி ஆற்றுகின்றனர்.