நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம்.
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது.
அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் இயற்கையாகவே அல்கலைன் நிறைந்துள்ளது.
இதை இரைப்பையை சுத்தப்படுத்தவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை சரிசெய்யும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ரத்த நாளங்களை வலுவாக்குகிறது. அதனை சுத்தம் செய்யத் துணைபுரிகிறது.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆக்சிடென்ட் அழுத்தத்தை குறைக்கிறது. இதில் உள்ள கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்தும், கண்களில் நீர் வடிவது தடுக்கிறது.
நெல்லிக்காய் கொண்ட ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவதால் வலிமையான மென்மையான கூந்தல் கிடைக்கும். பொடுகு தொல்லை போன்றவை தடுக்கும்.
குறிப்பாக இது குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலி, ஆர்தரிட்ஸ் வலி போன்றவற்றை குணமாகும். உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நெல்லிக்கனியை தங்கள் டயட்டில் இணைத்துக் கொள்வது மிகச் சிறந்த பயனளிக்கும்.
நெல்லிக்காய் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி துணை புரிகிறது. அவை கொலாஜனை அதிகப்படுத்தி சருமத்தை பொலிவடையச் செய்கிறது.
நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்கின்றது.
ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதளவில் பயன்படுகின்றது.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகின்றது.
நீரழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுகின்றது. நெல்லிக்காயில் உள்ள குரோமியம் நீரழிவு சிகிச்சைக்கு மிகவும் பயன் தரும்.
வறண்ட சருமத்தின் காரணமாக உண்டாகும் பிரச்சினைகளுக்கு நெல்லிக்காயை சாப்பிட்டால் ஒளிரும் சருமம் கிடைக்கின்றது.
இதய நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் சாப்பிடுவதால் இதய தசை வலுப்படுத்தும், அதோடு உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தையும் சீர் படுத்துகின்றது. இது உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கவும் உதவி செய்கின்றது.