கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய்யும் , நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியும் அளிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைக்கா நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்த்தில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்தால் போதாது. ஒரு படப்பிடிப்பிற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் உறுதி செய்யும் பட்சத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். ஒரு படத்தில் பணியாற்றும் கதாநாயகன் தொடங்கிய கடைசி தொழிலாளர் வரை அனைவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பும் இருக்கும் பட்சத்திலேயே ஒரு குறிப்பிட்ட படத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிம்மதியாகவும் , முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியும் என்கின்ற ரீதியில் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்.