என்பிஆர் , என் ஆர் சி சட்டத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்து வருகின்றது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடுமுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சியான திமுக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டடம் நடத்தியது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்ட பேரவையிலும் இந்த சட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஏற்றவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துவந்து நிலையில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் NPR , NRC சட்டத்தை இயற்றக்கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
”அல் ஹக்” என்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் 250 பேர் எம்.எல்.ஏக்களை கடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் தமிழகத்தில் NPR , NRC சட்டத்தை இயற்றினால் 234 எம்.எல்.ஏக்களையும் கடத்துவோம் என்று சென்னை வண்ணாரப்பேட்டை காவல்ஆய்வாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.