சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலத்திலும் உள்ள மாவட்ட எல்லைகள் மூடபட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் நேற்று மாலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றது.
தலைமைச் செயலக அலுவலர் , மருத்துவர்கள் , செவிலியர்கள் இது மட்டுமின்றி பல்வேறு அத்தியாவசியமான வேலைக்கு செல்வோருக்கு மட்டும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது சுகாதாரம் , குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் பணி மகத்தானது. அவர்களின் உயிரையும் துச்சமாக நினைக்காமல் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்தவித தடையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இதுபோன்ற ஒரு சேவையை வழங்கிவருகிறது.
குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் பல்வேறு திசைகளில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த பேருந்து வசதி இல்லை என்றால் மிகவும் சிரமம் ஆகிவிடும், இவர்களுக்கு போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்து சிங்கப்பெருமாள் கோவில் , கூடுவாஞ்சேரி , தாம்பரம், பூந்தமல்லி, மணலி ஆகிய பகுதியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.