Categories
மாநில செய்திகள்

JUST NOW : முறைகேட்டில் தொடர்பில்லை – ஜெயக்குமார் மனு …!!

குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார்.

குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் ஜெயக்குமார் சரண் அடைவதற்கு முன்பாக ஒரு மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் சிபிசிஐடி போலீசார் உள்நோக்கத்துடன் தன்னுடைய புகைப்படத்தை ஊடகங்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர். எனக்கு அவதூறாக பரப்பி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடுக்கும் ,  தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தன் பெயரை கெடுக்கும் நோக்கில் சிபிசிஐடி போலீசார் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றார் என்ற ஒரு குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் இல்லாதபோது தன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சென்று சோதனை நடத்தி எனக்கு சொந்தமான பொருளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். போலீசார் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள் என்ற ஒரு தகவலையும் அந்த மனுவில் தெரிவித்து இருக்கின்றார்.

Categories

Tech |