கோவையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா ஒன்று இருக்கிறது. இந்த பூங்காவில் பிரதீஷ் – சுகன்யா தம்பதியின் மகன் லக்சன் ஐந்தாம் வகுப்பு படித்துவரும் 10 வயது சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான்.பூங்காவில் பராமரிப்பு சில நாட்களாக இல்லை என கூறப்படுகிறது. அங்கே மின் விளக்குகளுக்கு விளக்குக்கு அடியில் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் அந்த சிறுவன் அதை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார்.
இதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனின் உடல் கொண்டு செல்லப்பட்டு, தற்போது அங்கு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள் . தற்போது வரைக்கும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பெற்றோர்கள் தற்போது வேதனை தெரிவிக்கிறார்கள்.
பத்து வயது சிறுவனை இழந்த அந்த குடும்பத்தினர் தற்போது பெரும் சோகத்தில் இருக்கின்றார்கள். ஒரு பூங்காவில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு இல்லாமல் மின்கம்பி அறுந்து கிடந்தது கூட தெரியாமல் குடியிருப்பு நிர்வாகம் அலட்சியப்போக்காக நடந்திருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் . இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.