மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேப்பியார் பாலம் வழியாக தலைமைச் செயலகம் வழியே செல்ல கூடிய பேருந்துகள் சிவானந்தா சாலையில் அனுப்பப்படுகின்றன .