Categories
மாநில செய்திகள்

JUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…!!

பழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனையாகி வருகின்றது. இதில் சமூக இடைவெளியும், மூகவசமும் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது பழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்கள் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதன் காரணமாக மது வாங்க வருபவர்கள் கட்டாயம் குடை கொண்டு வர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் குடை கொண்டு வருவதால் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |