Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி……. அதிர்ச்சியில் ரசிகர்கள்…….!!!!

வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தற்போது மீண்டும் இவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், இவர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Photo by actor Vadivelu || டுவிட்டரில் அஜித்தை வாழ்த்தி நடிகர் வடிவேலு  வெளியிட்ட புகைப்படம்

 

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு லண்டன் சென்றுள்ளனர். அங்கு சென்று திரும்பிய போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |