Categories
மாநில செய்திகள்

JUST IN: 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு… சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற அலுவலக, நூலக உதவியாளர்கள் தேர்வில் 3-ம் பாலினத்தவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசும்,  உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |