Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: வருண் சிங் உடலுக்கு…. இந்திய விமானப்படை அதிகாரிகள் மரியாதை…!!!!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருணசிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த கேப்டன் வருண்சிங்கின் உடல் பெங்களூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு வருண்சிங்கின் உடலுக்கு இந்திய விமானப் படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

Categories

Tech |